வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆவா குழுவுடன் தனக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார்..!!

யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது ஏற்பட்ட தாக்குதலுக்கு ஆறுதல் அழிக்கும் முறையில் தாம் எந்த பாதுகாப்பும் இன்றி ஆவா குழுவினரோடு கலந்துரையாட தயார் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

இது போன்ற தாக்குதலின் விளைவால் வட மாகாணத்தை குறி வைத்து ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயல்களினால் இடம் பெற்று வருகின்றது.

இந்த பிரச்னையை தீர்த்து வைக்க நான் ஜனநாயக ரீதியிலான பேச்சு வார்த்தை நடத்த தயார் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயகத்திற்கு எதிராகவும் நாட்டில் உள்ள எந்த ஒரு அப்பாவி மக்களுக்கு எதிராகவும் சட்ட விரோதமான நடவடிக்கையினை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஆவா குழுவினரை ஆளுநர் நேரில் சந்தித்து அவர்களின் பிரச்னையை உடனே தீர்க்கவுள்ளார். மேலும் ஆவா குழுவினர் வடக்கு மக்களின் வாழ்க்கையினை சிதைப்பதற்கான காரணம் என்ன என வினவவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற பிரச்சனை இனி நடக்க கூடாது என்பதற்காக அவர்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக பகிரங்க அழைப்பினை விடுத்த ஆளுநர் விடுத்துள்ளார் .

error: Alert: Content is protected !!