இன்றைய ராசி பலன்! 15.06.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 15.06.2019 வைகாசி 32 திரயோதசி பிற்பகல் 3.29 வரை விசாகம் முற்பகல் 11.06 வரையாகும். நாள் முழுவதும் சித்தம். நல்ல நேரம் பிற்பகல் 2.53 – 4.23 வரையாகும். இராகு காலம் காலை 8.53 – 10.23 வரையாகும். எமகண்டம் மதியம் 1.23 – 2.53 வரையாகும். குளிகன் மாலை 5.53 – 7.23 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கியமான சில விஷயங்களை நீங்களே நேரடியாக செய்வது நன்று.வியாபாரத்தில் உங்களுடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படும்.பணி புரியும் இடத்தில் அலைச்சல் நிலை ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:  இன்றைய நாள் உங்களுக்கு நல்ல வாய்ப்புக்களை தேடித்தரும் நாளாக அமையும்.திருமணம் கைகூடி வரும். உங்களின் துணைவி வழியில் நன்மை வந்து சேரும். தொழில்சார் உத்தியோகத்தில் நன்மையையும், நல்ல மதிப்பையும் பெறுவீர்கள்.உங்களுக்கே உங்கள் மீது ஒரு நம்பிக்கை வரும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:  உங்கள் வீட்டில் குதூகலம் பொங்கி வரும் நாளாக அமையும். கடன் தொல்லை நீங்கும். இன்றைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும். அரசாங்கத்தால் அதிகளவான நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டும், நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். திடீர் யோகம் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே: எதிர்கால திட்டம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சொந்தங்களால் நன்மையும் உண்டாகும். நீங்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தொழில் மூலம் புதிய நபர்களை சந்திக்க நேரிடும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே: பிரச்சனைகளை கண்டு அஞ்ச மாட்டீர்கள். குடும்பத்தில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கடன் தொல்லையாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் வாய்ப்பு கைகூடும். வேலையில் அதிக தனலாபம் ஏற்படும். அரசாங்கத்தால் நீக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் அதிக நன்மை ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே: பேச்சில் தெளிவு நிலை ஏற்படும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். வாகன பிரச்சினைகளை சீர் செய்வீர்கள். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் சில எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும் நாளாகும்.

துலாராசி உறவுகளே: குடும்பத்தில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாக வாங்குவீர்கள். தொழிலில் அமோக வாய்ப்புக்கள் உங்களை வந்து சேரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். நீங்கள் எப்பவும் மனசாட்சிபடி செயல்படுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:. உங்கள் ராசிக்குள் சந்திரன் வருவதனால் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை சுமூகமாக நீங்கும். தொழிலில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிக குறைந்த நிலையில் காணப்படும். தொழில் சார் உத்யோகத்தில் அதிகாரிகளுடன் வீண் பேச்சை குறைப்பது நல்லது. இன்று விட்டு கொடுப்பது மிகவும் நல்லது.

தனுசு ராசி அன்பர்களே: நீங்கள் எடுத்த காரியங்களை முடிப்பதற்கு அலைச்சல் நிலை ஏற்படும். குடும்பத்தில் அன்பாகவும் அரவணைப்பகவும் இருங்கள். சில நெருங்கிய உறவால் பிரச்சினைகள் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் அதிக வேலை காரணமாக களைப்படைவீர்கள். இன்று அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகர ராசி காரர்களே: நீங்கள் எதையும் கண்டு அஞ்ச மாட்டீர்கள். குடும்பத்தில் உள்ளோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். மற்றவர்கள் முன்னாடி மதிப்பும், மரியாதையும் கூடும். உங்களை வேணாம் என்று போனவர்கள் மீண்டும் தானாக வந்து கதைப்பார்கள். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழிலில் சக ஊழியர்களால் பாராட்டு கிடைக்கும். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையும்.

கும்ப ராசி உறவுகளே: நீங்கள் கோவத்தை கட்டுப்படுத்தினால் நன்மை உண்டாகும். உங்கள் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நேரிடும். தொழிலில் விட்டு சென்ற வாடிக்கையாளர் மீண்டும் வந்து சேருவார்கள். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்கள் முயற்சியினால் நீங்கள் சாதிக்க கூடிய நாளாக இன்றைய நாள் அமையும்.

மீன ராசி நேயர்களே: தம்பதியினருக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி அன்னியோன்யம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தோழர்களை சந்திக்க நேரிடும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் புதிய தனலாபம் ஏற்படும். தொழிலில் உள்ள பணிகளை விரைவில் முடிப்பீர்கள். உற்சாகம் பொங்கி வரும் நாளாக இன்றைய நாள் அமையும்.

error: Alert: Content is protected !!