திருமண ஆசை காட்டி மனைவியாக்கி பின் குடும்பத்தினரின் பாலியல் ஆசைக்கு விருந்தாக்கப் படும் அப்பாவி ஏழைப் பெண்கள். ! திடுக்கிட வைக்கும் உண்மைகள் .!

உலக நாடுகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப் படுத்துவதற்காக சீனா மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றாலும் தோல்வியும் கண்டது. சீனாவில் பெண் குழந்தை பிறப்பை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததால் ஆண்கள் அதிகரித்துவிட்டனர்.

இவர்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் குறைவானதால் பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வந்தனர். பகிஸ்தானில் வாழும் ஏழை கிறிஸ்தவ குடும்பங்களை குறி வைத்த இவர்கள் ஏஜன்சி வைத்து திருமணம் பேசியுள்ளனர்.

தங்கள் மகளுக்கு நல்ல வரன் என நினைத்து மகள்களை பெற்றோர்கள் கட்டி கொடுத்துவிடுகின்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானில் வாழும் இவர்கள் சீனா சென்றால் சுகமாக வாழ முடியும் என ஆசை காட்டி அழைத்துச் செல்கின்றனர். அங்கு தான் ஆரம்பமாகிறது அழிவு.!

பாகிஸ்தானில் இருந்து சீனாவிற்கு திருமணம் செய்து சென்ற நதாசா இது பற்றி கூறுகையில்..பாகிஸ்தானில் இருக்கும் வரை அன்பாக பார்த்துக் கொண்டார். நம்பி சீனா சென்றேன். அங்கு சென்ற பின் தான் புரிந்துகொண்டேன் ஏஜென்சி ஒருவர் குறித்த நபருக்கு என்னை விற்றுவிட்டதை.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அங்கு சென்றதும் நீ என் அடிமை உன்னை விலை கொடுத்து வாங்கிவிட்டேன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கூறினார். வேறு வழி இல்லை வீட்டு வேலைகள் தானே என நினைத்து வீட்டிற்குள் சென்றேன். அதிர்ந்து போனேன். என் கணவரின் அண்ணன் தம்பி இருவருக்குமே நான் மனைவி.

பாலியல் துன்பங்கள் ஏராளம். தப்ப நினைத்து முடியாமல் நண்பர்கள் மூலம் உதவி கோரிய பின்னரே நான் மீட்கப் பட்டேன் என கூறியுள்ளார். இதனை சீனா முற்றிலும் மறுத்த போதும். பாகிஸ்தானில் இருந்து திருமணம் முடிந்து சீனா சென்ற பெண்களிடம் நடத்திய விசாரணையில் 75% மான பெண்கள் இது உண்மை என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்..!

error: Alert: Content is protected !!