கல்முனை போராட்டத்தை முன்வைத்து கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்..!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிழக்கு மாகாண மாணவர் பேரவை துண்டுப்பிரசுரங்கள் மூலம் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஹர்த்தாலும் நடைபெறாமல் தமது அன்றாட நடவடிக்கையை இலகுவான முறையில் வழமை போன்று இன்று நடந்து வருகின்றது. திருகோணமலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் மிக சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக கந்தளாய், கிண்ணியா,திருகோணமலை நகரம், மூதூர், சம்பூர் மற்றும் தம்பலகாமம், சேருவில போன்ற இடங்களிலும் வழமை போன்று மக்களின் அன்றாட நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!