மக்களின் நலன் கருதி மதுபானக்கடையை உடனடியாக மூட தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறினார்..!

தமிழகத்தில் மதுபானக்கடையை உடனடியாக மூடக்கோரி போராடிய மருத்துவர் ரமேஷ் கூட ஒன்றாக இணைந்து சீமானும் நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் உறுதுணையாக நிற்போம். மேலும் மருத்துவரின் குடும்பம் போல் இனி எந்தவொரு குடும்பமும் பாதிக்கப்படாதிருக்க உடனடியாக மதுபானக்கடையை மூடவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் கோவை ஜம்பு கண்டி பகுதியிலுள்ள மதுபானக்கடையில் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்திய நபரால் சமூகப் போராளியும், மருத்துவருமான கோவை ரமேஷ் அவரின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த தகவலை கேட்டு நாங்கள் அதிர்ச்சிடைந்துள்ளோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான அப்பாவி மக்களை குடிகாரர்களாக மாற்றிய 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறையால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கின்றது. இது வரை நாளிலும் மதுபானக்கடைகளை முற்றாக மூடாது மதுவிலக்கைச் செயற்படுத்த மறுத்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை நாங்கள் பகிரங்கமாக கண்டிக்கிறேன்.என்று சீமான் கூறினார். மேலும் மருத்துவர் தனது காயப்பட்ட மகளை பார்க்க செல்லாமல் தனியாளாக மதுபானக்கடையை முற்றாக மூடுமாறு போராடி அதில் வெற்றியடைந்தார். தமிழக அரசு மதுபானக்கடையை மூடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ரமேஷ் அவர்களின் மகள் சாந்தி தேவி கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்.எனவும் கூறினார் மிகவும் சிக்கலான இத்தருணத்தில் மருத்துவர் ரமேஷ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பக்கபலமாக நிற்போம் என்று உறுதியளித்தார். மேலும் இது போன்ற உயிரிழப்பு இனியும் இடம்பெறக்கூடாது. மதுபானக்கடைகளை முற்றாக தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!