மன்னிப்புச் சபை ஜனாதிபயிடம் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு தெரிவித்தார்…!!

இலங்கையில் போதைவஸ்து தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13பேருக்கு மரண தண்டனை விதிக்கும் யோசனையை கைவிடவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புப் சபை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 13பேரையும் தூக்கிலிடும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக இலங்கையில் நிறைவேற்றப்படும் தூக்குத்தண்டனையாக இருக்கும். என்றும் கூறினார்.மேலும் எந்த தூக்கு தண்டனை பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இது புதிதாக பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட அலுகோசுவுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இவர்கள் தூக்கிலிடப்பட்டால் அதுவே சட்டத்துக்கு புறம்பகவும் பெரும் குற்றமாகவும் காணப்படும். அத்துடன் சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கும் எதிரானதாகும் என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

error: Alert: Content is protected !!