குடற்புழு தொல்லைக்கு உடனடி தீர்வு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தூளை சாப்பிடுங்கள் போதும்..!!

வயிற்றுப் புழுக்கள் இது பெரிய நோய் இல்லை தான். ஆனால் இதனால் ஏற்படும் தொல்லைகள் அதிகம். குடற்புழு என்பது சிறியவர், பெரியவர் என்று இல்லை எல்லோரையும் பாதிக்கின்றது, இளைஞர் யுவதிகளை கூட விடுவதில்லை இந்த குடற்புழு. இதனால் ஏற்படும் தொல்லைகள் நீங்கள் அறிந்தது தான். வயிற்று வலி அத்துடன் இரவில் தூக்கத்தை தொலைத்துவிட வேண்டியது தான். மிகுதியை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். இந்த குடற்புழு உருவாக காரணம் முதலில் சுத்தமின்மை தான். அவசரத்தில் உணவு உண்பது, கைகளை சுத்தப் படுத்தாமல் கண்டதையும் வாயில் போட்டுக் கொள்வது. நகங்கள் வளர்ப்பது அதில் உண்டாகும் கிருமிகள் வயிறுக்குள் செல்வது, அதே போல் இனிப்பு உணவுகளை அதிகம் உண்ணுவது போன்றவற்றால் வயிற்றில் புழு உண்டாகின்றது.

இவற்றுக்கு கூட நாம் ஆங்கில மருந்து எடுக்கச் செல்கிறோம், ஆனால் இதற்கு மருந்து மாத்திரை தேவை இல்லை.வீட்டில் இலகுவாக மருந்து செய்து கொள்ளலாம். அதாவது பூசணி விதைகள் வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் இதில் பெரியவர்களுக்கு அரை கரண்டி பூசணி விதை தூள் எடுத்து அத்துடன் அரை கரண்டி தேன் கலந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும்

பேஸ்புக்கில் Like செய்ய!!

பூச்சித் தொல்லை உடனே தீர்ந்துவிடும்,அதே போல் சிறுவர்களுக்கு 1/4 தேக்கரண்டி பூசணி விதைத் தூளில் 1/4 தேக்கரண்டி தேன் கலந்து மூன்று நாட்கள் கொடுத்து வர இந்த தொல்லை தீர்ந்து விடும். வயிற்றுப் புழு வெளியேற மூன்று நாகளுக்கு இரவில் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.!

error: Alert: Content is protected !!