கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ எட்மன்டனுக்கு விஜயம்..!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று (வியாழக்கிழமை) மாலை எட்மன்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் இவர் நடைபெறவுள்ள பெடரல் தேர்தலுக்கான பிரச்சார பணிகளுக்காகவே எட்மன்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்மன்டனின் தென்கிழக்கில் உள்ள கிராண்ட் இம்பீரியல் மாநாட்டு மையத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இயற்கை வளத்துறை அமைச்சர் அமர்ஜீத் சோஹி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

‘Team Trudeau 2019’ என்ற தொனிப்பொருளில் செயற்படுத்தப்பட்டு வரும் தேர்தல் பிரச்சாரப் பணிகளின் ஒரு அங்கமாகவே இந்த நிகழ்வு இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இதேவேளை, கனேடிய பெடரல் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது என்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!