இந்தியாவில் நாளை முதல் ரயில் மூலம் இலவச குடிநீர் விநியோகம்…!!!

இந்தியா ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முறையாக நாளை முதல் ரயில் மூலம் இலவச குடிநீர் வழங்குவதற்கு தமிழக அரசு தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

மேலும் குறித்த கூட்டத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது. இது குறித்த திட்டத்திற்காக கடந்த மாதம் 21ஆம் திகதி 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சரக்கு ரயில் ஒன்றை நேற்று முன்தினம் ஜோலார் பேட்டைக்கு கொண்டு வந்ததோடு, சோதனை ஓட்டமும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த திட்டம் வரும் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!