ஒரு நாள் அதிமுக வெற்றி பெறும் அப்போது இந்திய அணியும் வெற்றி பெறும்.! அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!!

நேற்றைய தினம் நியூஸிலாந்துடனான உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த உடனேயே விக்கெட்டுகளை இழந்ததே இதற்கு காரணமானது.

இந்த நிலையில் கிரிக்கெட்டுடன் அரசியலை இணைத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் நீட் பிரச்சனைக்கு முக்கிய காரணம் திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் என விலாசித்தள்ளிய ஜெயகுமார் தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை திமுக அடகு வைத்துவிட்டது என கூறினார்.

கச்சத்தீவு, காவேரி என அனைத்து பிரச்சனைகளையும் உருவாக்கியது திமுக தான் ஆனால் அதிமுக உரிமை மீட்கவே போராடி வருகிறது என கூறியதுடன் அதிமுக மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்தது போல தான் இந்திய அணி உலக கோப்பையில் தோற்றது.

அரசியலிலும் விளையாட்டிலும் வெற்றி தோல்வி உண்டு. ஒரு நாள் அதிமுக வெற்றி பெறும் அதே போல் இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.!!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!