கிழக்கு மாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 11 பேர் கைது…!!

இலங்கை கிழக்கு மாகாண கடற்படடையின் கட்டுபாட்டிற்கு உட்பட்ட கடல் பகுதியில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் செயற்பட்டதாக 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த தடை விதிக்கப்பட்ட மீன்பிடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை உட்பட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களினால் இவர்கள் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் வலிநிவாரணி குளிசைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த நால்வர் புல்மோடை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். மேலும் இவ்வாறு கைது செய்தவர்களிடம் இருந்து 600 வலிநிவாரண குளிசைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

error: Alert: Content is protected !!