இலங்கை பிரதமர் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்தார்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. மேலும் இதில் அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் எந்த இலாபமும் இல்லை எனவும் அனேகமான உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டார்கள்.

அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசை வீழ்த்துவதால் எந்த பலனும் கிடைக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து கூட்டமைப்பின் உதவிக்காக கல்முனை சம்பவத்தை ஆவது ரணில் நிறைவேற்றித்தர வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும், இதை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த சம்பவம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழியை இரண்டாவது தடைவையாக உத்தியோக பூர்வமாக பிரதமர் ரணில் எழுத்து மூலம் வழங்கியுள்ளதாகம் தகவல் தெரிவித்தனர்.இந்த நிலையில் இன்று மாலை இடம்பெறுகின்ற அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!