கன்னியாவில் உடைக்கப்படுகிறது பிள்ளையார் ஆலயம்..!! சிதைந்து போகும் தமிழர் உரிமை..!!!

திருகோணமலை கன்னியா பிரதேசத்திலுள்ள தமிழர்களின் பிள்ளையார் ஆலயத்தை உடைப்பதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடைக்க பெற்றதாகவும், மேலும் அந்த இந்து ஆலயத்தை உடைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தென் கைலாய ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவசரச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்து விவகார அமைச்சரிடம் கூறுவதற்காக தென் கைலாய ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவரை தொர்பு கொள்ளமுடியவில்லை என்றும் தெரிவித்தார்.

சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மிக முக்கியமாக செயற்படுத்த வேண்டிய இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் கட்சி பேதம் இன்றி செயற்படவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கையை முன்வைத்தனர் என தென் கைலாய ஆதீனம் தவத் திரு அகத்தியர் அடிகளார் இந்து விவகார அமைச்சர் மணோ கணேசனுக்கு அவசர செய்தி அனுப்பிவைத்துள்ளார்.

நன்றி – இந்த காணொலி காப்புரிமை : ஐபிசி தமிழ் நியூஸிற்கு உரித்தானது

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!