இலங்கை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்…!! மீண்டும்நம்பிக்கையில்லாப் பிரேரணை…!!

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளை மாலை வரை தொடரும்.

ஈஸ்டர் தினம் அன்று நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உற்பட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை தொடர்ந்து நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொது எதிரணி ஆதரவு வழங்கியுள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் போது பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் தான் இருக்கு என்று குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து ஒரு முடிவு எடுக்கவுள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!