இலங்கை மக்களின் உயிருக்கு உலை வைக்கும் ரம்புட்டான்…!!!

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியில் வீசி விட்டு செய்வதை பழக்கமாக்கி கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக கூறப்படுகிறது.

இது போன்ற காரணங்களாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தார்கள். மேலும் இந்த ஆண்டு டெங்கு நோயால் மட்டும் 32 பேர் உயிரிழந்தாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!