“அப்பா அண்ணா என்னால் முடியவில்லை” என்னை விட்டு விடுங்கள் …கண்ணீர் விட்டு அழுத பாஜக எம் எல் ஏ மகள்..!!

அப்பா, மற்றும் சகோதர்களிடம் என்னைவிட்டு விடுங்கள் என மகள் கெஞ்சிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. உத்திரபிரதேச பா.ஜ.க எம் எல் ஏ ராஜேஷ் மிஸ்ரா என்பவரின் மகளே இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது மகளான 23 வயது ஷாக்சி மிஸ்ரா வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இவர்களை இவரது காதலரான அஜிதேஷ் குமார் வீட்டில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து சாக்‌ஷி வெளியிட்ட வீடியோவில் நான் எனக்கு பிடித்தவரை திருமணம் செய்துகொண்டேன் என் மரியாதைக்குறிய அண்ணாக்களான எம் எல் ஏ பப்பு பர்தால் ஜி, விக்கி பர்தால் ஜி , என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். என்னை என் கணவருடன் வாழ் விடுங்கள்.

“அண்ணா அப்பா என்னால் முடியவில்லை ஓடிக்கொண்டிருக்க விட்டுவிடுங்கள்” தயவு செய்து குண்டர்களை அனுப்பி என் கணவர் குடும்பத்திற்கும் எங்களுக்கும் தொல்லை கொடுக்காதீர்கள் என கூறியதுடன் எனக்கோ என் கணவரின் குடும்பத்திற்கோ ஏதும் நடந்தால் அதற்கு என் அப்பா மற்றும் சகோதர்களே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இது தொடர்பாக ராஜேஷ் கூறுகையில் என் மகள் மேஜர் அவளுக்கு நான் எப்படி தொல்லை கொடுப்பேன். ஆசை ஆசையாய் நான் வளர்த்த பெண் குழந்தை அவள் என் எப்படி வலி கொடுப்பேன். என் வேதனை இது தான் என் மகள் திருமணம் முடிந்து இருக்கும் நபருக்கு 9 வயது அதிகம். அத்துடன் சரியான தொழில் கூட இல்லை. அவளுக்கு அது பிடித்திருந்தால் வாழட்டும் எப்போதும் நான் தொல்லை கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளார்..!!

error: Alert: Content is protected !!