சிங்கப்பூர் எதிர் நோக்கவுள்ள பருவநிலை மாற்றம்..!!

2050 ஆம் ஆண்டுக்குள் ஏற்படும் அளவில் இல்லாத பருவநிலை மாற்றத்தைச் சந்திக்கும் நகரங்களில் சிங்கப்பூரும் கோலாலம்பூரும் அடங்கி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்த மழையின் காலம் மாறும் போது கடுமையான வெள்ளமும் வறட்சியும் உருவாகலாம் என்று பருவநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஸூரிக்கைத் தளமாகக் கொண்ட அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் குழு அந்த ஆய்வை மேற்கொண்டது. உலகில் 520 நகரங்களையும் நகர்ப்புறப் பகுதிகளையும் உள்ளடக்கி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்டவை அவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வதால் அதைச் சமாளிக்கும் வழிகளை நகரங்கள் ஆராய ஆய்வு உதவக்கூடும். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரேயடியாக வறட்சியும் மிதமிஞ்சிய மழையும் ஏற்படும் நிலை உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!