திருகோணமலை கந்தளாய் பகுதியில் வான் ஒன்று பாலத்தில் மோதி விபத்து…!!!

திருகோணமலையில் கந்தளாய் பகுதியின், சேருவில பிரதான வீதியிலுள்ள பாலத்தில் வானொன்று மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து காலையில் ஏற்பட்டதுடன் மூவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர், தோப்பூர் பகுதியை சேர்ந்த 35, 32 மற்றும் 15 வயதுடைய மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு இருந்து மூதூர் பகுதிக்கு சென்ற வானே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அதிக வேகமும் சாரதியின் தூக்கமுமே விபத்துக்கு காரணம் என்றும் சேருநுவர பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!