இன்றைய ராசி பலன்! 11.07.2019

உங்களோடு ஒரு முப்பது செக்கன் வாசகர்களே, அன்பிற்கினிய வாசகர்களே, ஒரு அன்பான , பணிவான வேண்டுகோள், மிகுந்த செலவுகளின் மத்தியில், ஓர் ஊடகமாக உங்கள் முன் பல்வேறு செய்திகளைப் பகிர்கின்றோம். தயவு கூர்ந்து நம் செய்திகளில், பயனுள்ளதாக அமையும் செய்திகளை, நமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து, உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஆதரவு வழங்குங்கள். நீங்கள் வழங்கும் இந்த ஆதரவு இந் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஓர் வரப் பிரசாதமாக அமையும். !!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 11.07.2019 ஆனி மாதம் 26ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும்.  தசமி பின் இரவு 4.15 வரை சுவாதி முன் இரவு 7.37 வரையாகும்.  சுப நேரம் காலை 7.29 – 8.59 வரையாகும்.  எமகண்டம் அதிகாலை 5.59 – 7.29 வரையாகும்.  இராகு காலம் மதியம் 1.29 – 2.59 வரையாகும்.  குளிகன் இரவு 8.59 – 10.29 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:  உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உணருவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.  பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.  வெளியூர் பயணம் ஏற்படும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  தாய்வழி ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்றைய நாள் எதிர்பாராத நன்மை கிட்டும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:   உங்கள் அன்பான பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  தொழிலில் அதிக இலாபம் கிடைக்கும்.  உறவினர், நண்பர்களின் வருகையால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.  பழைய நண்பர்களை சந்திக்க கூடும்.  நீங்கள் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.  இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மிதுன ராசி காரர்களே:   உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் இடம்பெறும்.  உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேறும்.  உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.  நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தைகள் அதிகரிக்கும். இன்றைய நாள் விட்டு கொடுத்து நாளாகும்.

கடக ராசி நேயர்களே:   உங்களின் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:    உங்கள் வீட்டில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள்.  சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.  பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தைகள் அதிகரிக்கும். புதிய கார் வாங்குவீங்கள்.  தாய்வழி உறவினற்களிடையே நன்மை உண்டாகும்.  இன்றைய நாள் பொறுமையுடன் இருக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:   தம்பதியினருக்குள் அன்யோன்யம் பிறக்கும்.  உங்கள் அழகு, இளமைக் கூடும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும்.  இன்றைய நாள் மனசாட்சிப்படி செயல்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:   உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் ஒரே நாளில் முக்கியமான வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.  திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும்.  வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:   தம்பிதியினர்களுக்கு இடையில் அனுசரித்துப் போவது மிக நல்லது.  உங்கள் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுவீங்கள். நீங்கள் வாகனங்களை செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  திருமணப் பேச்சு வார்த்தைகள் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:    உங்களின் பெற்றோர்களில் ஆசி கிடைக்கும்.  உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் தோல்வியில் முடியும்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  காதல் விவகாரம் தோல்வி அடையும்.  தாயாரின் அன்பு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:    உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  நீங்கள் சில வேலைகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  தொழிலில் இலாபம் ஏற்படும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:    உங்களை அனைவரும் புரிந்து நடப்பார்கள்.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய நண்பர்களால் நன்மை உண்டாகும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் அவதானமாக இருக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:    உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகள் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உங்களை அதிகாரிகள் மதிப்பார்.  வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.  நீங்கள் தேவையில்லாமல் அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். திருமணப் பேச்சு வெற்றி தரும். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

error: Alert: Content is protected !!