பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய வனிதா விஜயகுமாரின் குறும்படம். இத தான் எதிர்பார்த்தோம்…!

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை கவரும் விதத்தில் இருந்தாலும் கொஞ்சம் குழப்பமும் இருந்தது. வழமை போல் பாடலுடன் மகிழ்ச்சியாக ஆரம்பித்த பிக் பாஸ் பின் கொஞ்சம் சீரியஸ் ஆனது. கொலைகள் அதிகரிப்பதால் வீட்டிற்குள் பொலீஸாரின் உதவி தேவைப்பட்டது. அதற்காக இன்ஸ்பெக்டராக கவினும் கான்ஸ்டபிளாக மீராவும் பிக் பாஸால் தெரிவு செய்யப் பட்டனர். அத்துடன் ஆவிகளுடன் பேசும் சாமியாராக சாண்டி தெரிவு செய்யப் பட்டார். விசாரணைகள் ஆரம்பமானது.. ஆவிகளிடம் யார் உங்களை கொலை செய்தார் என்ற கேள்விக்கு மது மற்றும் லாஸ்லியா என பதில் அளித்தனர். இவர்கள் மது மற்றும் லாஸ்லியா குற்றவாளிகள் என்று தீர்மானித்தனர். அதன் போது கவினை கொலை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூற

அதனையும் வனிதாவும் முகெனும் கவினின் துப்பாக்கி எடுத்து மறைத்து கவினையையும் கொலை செய்து விடுகின்றனர். அதன் பின் கான்ஸ்டபிளாக இருக்கும் மீரா இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுகிறார். அதன் பின் பிக் பாஸ் குரல் வருகிறது. அதில் மீராவிடம் கொலையாளி யார் என கேட்கப்படுகின்றது. அதற்கு லொஸ்லியா மற்றும் மது என மீரா கூற வனிதாவிற்கு தொலைப்பேசி அழைப்பு வருகிறது,

அதன் பின் பிக் பாஸுடன் வனிதா பேசிய பின் கொலைகளை செய்தது அவர் என்றும் அவருக்கு உதவியாக இருந்தது மெகென் என்றும் கூறுகிறார்.இதனை கேட்டதும் ஷாக் ஆகும் போட்டியாளர்களுக்கு வனிதா ஒவ்வொருவருவரையும் எப்படி கொலை செய்தார் என்பதை பிக் பாஸ் குறும்படமாக வெளியிட போட்டியாளர்கள் ஷாக் ஆகின்றனர்.

அதுவரை அபிராமி,மதுமிதா, லொஸ்லியா தான் கொலை செய்கிறார்கள் என நினைத்து திட்டிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு இது ஷாக் குறும்படமாக அமைந்தது. வனிதா சிறந்த கொலையாளி என்பதை நன்றாகவே நிரூபித்து இருக்கிறார்..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!