மலேசியா அமைச்சரை ஆபாசக் காணொலியில் தொடர்பு படுத்திய நபர் பற்றிய தகவல்…!!

மலேசியா அமைச்சர் ஒருவர் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஆபாசக் காணொலியை செயற்படுத்தி இணையத்தில் பரவவிட்டதற்குக் காரணமான முக்கிய நபரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த நபர் தொடர்பில் விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை என கூறினார்.

மேலும் விசாரணை முடிவுபெற்றதும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நபர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் பல காணொலிகள் இணையத்தில் தீவிரமாக பரவி வருவதாகக் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அந்த வீடியோவில் நடைபெற்றுள்ள நபர் ஒருவர் தாமே என்று கெஅடிலான் கட்சியின் Santubong கிளையின் முன்னாள் இளையரணித் தலைவர் ஹஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸ் கூறியுள்ளார். மற்றொருவர் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் இந்த குற்றச்சாட்டை திரு. அஸ்மின் நிராகரித்தார்.

error: Alert: Content is protected !!