காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது…!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி நம்பருக்கு தவறான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த 57 வயதுடைய நபர் எல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், புறக்கோட்டையில் பகுதியில் இருக்கும் பள்ளிவாசலில் வைத்து 8 பேர் ஒன்றாக சேர்ந்து இந்த தாக்குதலை தீட்டியுள்ளதாகவும் என்று குறித்த நபர் பொலிஸ் அவசர தொலைபேசி நம்பருக்கு இந்த பொய்யான தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் தீவிர விசாரணையின் பின்னர் தெரிய வந்தது. இருப்பினும் அவர் என்ன காரணத்திற்கு அப்படியான ஒரு பொய்யான தகவலை கொடுத்தார் என்று தெரிவதற்காக பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்தார்.

error: Alert: Content is protected !!