பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச இரகசிய விஜயம்..!!

முல்லைத்தீவில் கொக்கிளாய் பகுதியில் உருவெடுத்து வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் இந்துக்களின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலை அபகரித்து உருவாக்கப்பட்டுள்ள விகாரைக்கும் இரகசிய விஜயம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச மேற்கொண்டார்.

மேலும் மணலாறு பகுதியில் சிங்கள மக்களுடனான “வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பவற்றை இரகசியமாக திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

மேலும் இந்த திடீர் விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவிய போது அவர் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை எனவும் தகவல் விடுத்தனர்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!