“உன்னை செருப்பால் அடிப்பேன்” பிக் பாஸ் வீட்டில் கோபத்தில் போட்டியாளரை திட்டிய தர்சன்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மக்களின் வாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டதோ நினைக்கும் அளவிற்கு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இதற்கு காரணம் நேற்றைய தினம் மோகன் வைத்யா காப்பாற்றப் பட்டதை தொடர்ந்து இன்று மதுமிதா அத்துடன் சரவணன் ஆகியோர் காப்பாற்றப் பட்டத்தை ப்ரோமோவில் காட்டினார்கள்.

பொதுவாக ப்ரோமோவில் யார் காப்பாற்றப் பட்டார் என்பதை காட்ட மாட்டார்கள், ஆனால் இன்று யாரெல்லாம் காப்பாற்றப் பட்டார்கள் என்பதை காட்டிவிட்டார்கள். இன்று இருப்பது மீரா மற்றும் வனிதா தான். இதில் வனிதா வெளியேறிவிட்டார் என்ற தகவல் வெளியாகி விட்டது. இந்த நிலையில் இன்னுமொரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. வனிதாவின் இடத்தை மீரா மிதுன் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மீரா மிதுன் லாஸ்லியாவிற்கு தர்சன் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாக நேற்று பற்ற வைத்து விட்டார். ஆனால் லொஸ்லியா தர்சன் மற்றும் சாண்டியை அண்ணா என்றே அழைக்கிறார். இந்த நிலையில் மீரா தர்சனை காதலிப்பதாக ஒரு புரளியை சக்‌ஷியிடம் கூற அது கமலஹாசன் வரை வந்துவிட்டது. அது காலையில் ப்ரோமோவிலும் வந்தது.

இந்த நிலையில் தர்சனும் மீராவும் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மீரா தர்சனின் மீது குற்றங்களை அடுக்குகிறார். அதில் கடுப்பாகும் தர்சன் மீராவை செருப்பால் அடிப்பேன் என்கிறார். அதன் பிறகு வார்த்தையை அளந்து பேசு என மீரா கூற மன்னிப்பு கேட்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!