கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு…!!

கனடாவின் வடக்கு கியூபெக், பகுதியில் மிதவை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து விமான விபத்தில் படுகாயமடைந்த நபர் கிரிஃபன் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மாண்ட்ரீலுக்கு வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இதன் பின்னர் இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரைக்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!