" "" "

2021ம் ஆண்டில் ஆபத்தை சந்திக்கப் போகும் ராசிகள் என்ன.? ஆபத்தை தடுக்கும் 12 ராசிகளுக்குமான சிறப்பு பரிகாரங்கள் இதோ உங்களுக்காக.!!

பிறக்கும் 2021 ரிஷபம், சிம்மம், விருச்சிகம் , உட்பட ஒரு சில ராசிகார்களை தவிர மற்றைய ராசிகார்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது, குறிப்பாக சனி பெயர்ச்சியினால் மிகப் பெரிய இழப்புகளை சந்திக்கப் போகின்றனர். இந்த இழப்புகளில் இருந்து ஓரளவு உங்களை காப்பாற்றிக் கொள்ள சில பரிகாரங்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம், மேஷராசி நேயர்கள், திங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று சுத்தமான நல்லெண்ணை வாங்கிக் கொடுக்க வேண்டும், உங்கள் வசதிக்கேற்ற அளவை வாங்கி இறைவனுக்கு தானம் செய்கிறேன் என மனதில் நினைத்து கொடுத்து வாருங்கள்.

ரிஷபராசி உறவுகள் முதியவர்களுக்கு தான தர்மம் செய்யுங்கள், முடிந்தார் முதியோர் இல்லங்களுக்கு சென்று உங்களால் முடிந்த தான தர்மம் செய்யலாம், உணவு கொடுப்பது சிறப்பு. மிதுனராசிகார்களுக்கு இது கடினமான காலமாகும். இவர்கள் எள்ளு சாதம் வடித்து ஏழைகளுக்கு வயிறு நிறைய உணவளியுங்கள், இது உங்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் அற்புத மருந்தாகும், கடக ராசி நேயர்கள், எருமை மாட்டிற்கு புண்ணாக்கு, எள்ளு, தானமாக கொடுக்கலாம்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மற்றும் தண்ணீர் கொடுப்பதன் மூலமும் நன்மைகள் தேடிக்கொள்ளலாம். சிம்ம ராசிக்கு இது ராஜயோக நாட்கள், அதனால் குழந்தைகளை மகிழ்ச்சி படுத்துங்கள், ஏழை குழந்தைகளின் கல்விக்கு தேவையான உதவிகளையும், உணவுக்கும் உதவுங்கள். கன்னி ராசி நேயர்கள் யாசகர்களுக்கு உதவுங்கள், போர்வைகள் உட்பட ஆடைகளை தானமாக அளிக்கலாம், ஆனால் கிழிந்த அல்லது அணிய முடியாத ஆடைகளை தான தர்மம் செய்யாதீர்கள். அடுத்து துலா ராசிக்கு ,

உங்களுக்கும் இந்த வருடம் கடினமான வருடமாகும், அதனால் மன நலம் குன்றிய, அதே போல் மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உங்கள் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக இருந்தால் இந்த வருடம் ரெஜிஸ்டர் செய்யுங்கள், அத்துடன் இரத்த தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

தனுசு ராசிகார்கள் தானம் செய்யும் மனசு கொண்டவர்கள், இவர்கள் சிவன் அடியார்களின் பாத பூஜை செய்வது, உணவு உடை தானமாக கொடுப்பதும் சிறந்த பரிகாரமாகும். அடுத்து மகர ராசிக்கார்கள், கல்வியை தொடர முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவலாம், அத்துடன் புத்தகங்கள் வாங்கி கொடுக்கலாம். கும்ப ராசிகாரர்கள் திரு நங்கைகளுக்கு வெள்ளி அல்லது தங்கம் வாங்கி கொடுக்க ஆபத்துகள் குறையும்.

மீன ராசி நேயர்கள், அரிசி அல்லது நெல் ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம், என்ன நண்பர்களே இது பயனுள்ள பதிவாக இருந்ததா? அப்படியானால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!