" "" "

இந்தியாவில் 9 ஆண்களை அசால்ட்டாக திருமணம் செய்த 30 வயது பெண்..! 10வது திருமணத்திற்கு முயன்ற போது கொடூர மரணம்..!!

இந்தியாவில் 9வது கணவரால் கொலை செய்யப் பட்ட மனைவி தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் Pahadi Shareef பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் நேற்றைக்கு முன் தினம் கத்தியால் குத்திக் கொல்லப் பட்டார். ஹைதராபாத்தில் உள்ள பெற்றோல் வங்கியில் பணி புரிந்து வந்த வரலட்சுமி அவரது கணவர் நாகராஜூவால் கழுத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் மனைவி வரலட்சுமியை தானே கொலை செய்ததாக பொலீஸில் சரணடைந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது தொடர்பாக பொலீஸார் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. 30 வயதான வரலட்சுமிக்கு நாகராஜூ 9வது கணவராவார். ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் உள்ள வரலட்சுமி பெற்றோல் பங்கு வந்து சென்ற நாகராஜுடன் பழக்கமானார், இது காதலான நிலையில் வரலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தையை விட்டு விட்டு நாகராஜுவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே அங்கிருந்த பழக்கடை கார இளைஞனுடன் வரலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவர் நாகராஜு மனைவியை பலமுறை எச்சரித்தும் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று வாக்குவாதம் அதிகமாகி உள்ளது.

வரலட்சுமி பழக்கடை இளைஞருடன் செல்லப் போவதாக கூறியதை தொடர்ந்து கடுப்பான நாகராஜு கத்தியை எடுத்து வரலட்சுமியின் கழுத்தில் பலமுறை குத்திவிட்டு பொலீஸில் சென்று சரணடைந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்த பொலீஸாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. நாகராஜு வரலட்சுமிக்கு 9வது கணவராகும், பழக்கடை இளைஞருடன் சென்று இருந்தால் 10வது திருமணமாகுமாம்..

15 வயதில் முதல் திருமணமான வரலட்சுமி அவரை விட்டுவிட்டு அவரது நண்பருடன் ஓடியுள்ளார். அதன் பின் திருமணம் சில மாதங்கள் வாழ்வது பின் வேறு ஒருவர் என 9 ஆண்களை திருமணம் செய்துள்ளார். 9வது மற்றும் 1வது 8 வது கணவருடன் மட்டுமே 1 வருடத்திற்கு மேல் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது..!!