" "" "

கணவனையும் , குழந்தையும் தூக்கி எறிந்துவிட்டு காதலனுடன் ஓடிய பெண்

திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தில் கனகராஜ் சரண்யா வசித்து  வந்தனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து தற்பொழுது 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கனகராஜ் அதிகம் படிக்காதவர் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார். மனைவி படித்தவர் மேலும் படிக்க அனுமதி கேட்கவே அதற்கும் தலைஅசைத்து செலவு செய்துள்ளார் கணவர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஒரு நாள் கணவனுக்கு ஒரு பெண் போன் செய்து உங்கள் வாட்ஸ் ஆப் பாருங்கள் என சொல்ல அதில் சரண்யா ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போல் படம் வெளியானது. அதைகண்டு  கனகராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின் சரண்யா விடம் விசாரித்ததில் அவன் தன் பிறந்த ஊர் காதலன் என்பதும் சிறு வயதிலிருந்தே பழக்கம் எனவும் தெரியவந்துள்ளது. இனிமேல் ஒழுங்காக இருப்பேன் என்று சரண்யா வாக்கு தந்ததை அடுத்து மீண்டும் எதையும் நினைவு படுத்தாமல் நல்ல முறையில் குடும்பம் நடத்தினர்.

திடிரென்று ஒரு நாள் கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு காதலனுடன் ஓடி உள்ளார். காவல் நிலையத்தில் தகவல் சொல்லி தேடியதில் இருவரும் கிடைத்தார்கள். யாருடன் வாழ விரும்பிகிறாய் என்று கேட்டதற்கு எனக்கு காதலன் தான் முக்கியம் என கூறியுள்ளார். குழந்தை எனக்கு பிறந்தது தந்துவிடு என கணவன் கேட்கவே குழந்தையை தந்து  விட்டு காதலனுடன் சென்றுள்ளார். கணவன் விட்டு சென்றால் தண்டனை உண்டு மனைவி விட்டு சென்றால் சட்டம் இல்லையாம். கனகராஜ் தரப்பிலிருந்து புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தான் விரும்பியவருடன் வாழ உரிமை உண்டு என நீதிமன்றம் கூறிவிட்டது.