" "" "

பாலியல் வலை வீசி திருமணம் செய்து மாற்றுத் திறனாளியை ஏமாற்றியவன் கைது!!

மும்பை அருகே ஜோகேஷ்வரி என்னும் ஊரில் ராஜேஷ் படேல் (35) வயதுடைய கயவன் தன்னுடன் பணிபுரியும் பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டுள்ளான். என்ன செய்தாலும் மசியாத அந்த பெண்ணை தாலி கட்டி தான் அனுபவிக்க முடியும் என்று எண்ணி. நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளான். சம்பந்தப்பட்ட பெண் நல்ல அழகானவள் ஆனால் மாற்றுத் திறனாளி எனவே இவன் பொய் கல்யாணம் செய்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என நினைத்து விடுமுறை நாளில் வேலை இருப்பதாக கூறி வர சொல்லி கோயிலுக்கு இழுத்து சென்று தாலி கட்டி ஆசை வார்த்தைகள் பேசி உள்ளான்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பின் வீட்டிற்கு கூட்டி செல்ல அந்த பெண் கூற ஏதேதோ காரணங்கள் சொல்லி ஹோட்டலில் ரூம் போட்டு சாந்திமுகூர்த்தத்தை முடித்துள்ளான். மாற்றுத்திறனாளி நமக்கும் திருமணம் நடந்ததை எண்ணி மகிழ்ந்த நேரத்தில் ராஜேஷ் வித்தியாசமாக நடந்துள்ளான். நமக்கு நடந்தது கல்யாணமல்ல வெளியில் கூறினால் உன்னை சும்மா விடமாட்டேன் என மிரட்டி உள்ளான். பின் நடந்ததை அனைத்தையும் தன் பெற்றோரிடம் வந்து கூறி அழ அவர்கள் காவல் துறையில் வழக்கு தொடுத்து தற்போது ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.