” தயவு செய்து மதம் பற்றி பேசாதீர்கள் ” இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அறிக்கை…!

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து டெல்லி சென்று குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் படி தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இதற்கமைய இன்றைய தினம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஏராளமான முஸ்லீம்கள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசின் அறிவிப்பை ஏற்று வந்திருந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை தனிமை படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டதுடன் மக்களின் ஒத்துழைப்பிற்கு அரசு சார்பில் நன்றியும் தெரிவிக்கப் பட்டது.

ஆனால் சிலர் இதனை முஸ்லீம்களால் தான் தமிழ் நாட்டில் கொரோனா பரவுகிறது என மத பிரச்சனையை தூண்ட ஆரம்பித்தனர். இதனை மதப் பிரச்சனையாக்க வேண்டாம் என அரசு கூறி வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் அறிக்கை ஒன்றை விட்டுள்ளார். அதில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். இது மதம் சார்ந்த பிரச்சனை இல்லை நாடும் நாட்டு மக்களும் சார்ந்த பிரச்சனை, இந்திய குடிமகனாக நாட்டில் கொரொனா பரவாமல் தடுப்பது உங்கள் கடமையாகும். அத்துடன் தயவு செய்து டெல்லி சென்று வந்தவர்கள் மீது மத சாயம் பூசாதீர்கள். வைரஸ் தொற்று ஏற்படும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இங்கு இந்து , முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற பெயர்களை மறந்துவிட்டு இந்தியன் என்று செயற்பாடுங்கள் என கூறியுள்ளார்…!!