" "" "

ஆரி பற்றி பாலாஜியிடம் கேட்ட ஆரி ரசிகர்.! பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது வெளிப்படையாக பதில் சொன்ன பாலாஜி.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் வேதா திரைப்பட விஜய் சேதுபதி, மாதவன் போல் இருந்தவர்கள் பாலாஜி மற்றும் ஆரி. இருவரும் ஏதோ ஒரு விதத்தில் நல்லவர்கள் தான். ஆனால் குறை சொல்வதில் ஆரியும் கோபப் படுவதில் பாலாஜியும் கெட்டவர்களாக இருந்தார்கள்.

பாலாஜி இல்லாவிட்டால் ஆரியாலும் ஆரி இல்லாவிட்டால் பாலாஜியாலும் கண்டிப்பாக பிரபலமாகி இருக்க முடியாது. இருவரும் வெளியே வந்தபின் நல்ல நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்காக பாலாஜி லைவ் வந்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதன் போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பாலாஜியிடம் ஆரி ரசிகர் ஒருவர் ஆரியுடன் இணைந்து திரைப்படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என கேட்டுள்ளார், இதற்கு பதில் அளித்த பாலாஜி பிக் பாஸ் வீட்டில் எங்கள் விளையாட்டு மட்டும் தான் உங்களுக்கு சண்டையாக தெரிந்தது.

நானும் ஆரி பிரதரும் எதிரிகள் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்போம், ஒரு விடயத்தை தெளிவாக சொல்கிறேன் பிக் பாஸ் வீட்டில் நடந்தவை விளையாட்டு மட்டும் தான், வெளியே வந்த பின் தான் நிஜம்.!!