" "" "

“பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் மிகவும் மோசமனவர் ஆரி தான்” பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடம் ஆரியை கேவலப் படுத்தும் ஜித்தன் ரமேஷ்.!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து டபுள் எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப் பட்டவர் ஜித்தன் ரமேஷ். அன்பு ஹேங் என்ற என்ற ஒன்றை தொகுப்பாளினி அர்ச்சனா உருவாக்க அதில் வெட்டியாக எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தார் ஜித்தன் ரமேஷ். ஏதாவது ஒரு உருப்படியான வேலை பிக் பாஸ் வீட்டில் செய்தாரா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் வரும். இவர் பைனல் செல்லவே கூடாது என்பதில் ரசிகர்கள் இருந்தார்கள்.

ராஜாவீட்டு கன்னுகுட்டியாக வீட்டில் இருந்த ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப் பட்டதற்கு ரசிகர்கள் சந்தோசப் பட்டார்கள். தற்போது பைனல் வாரம் என்பதால் வெளியேற்றப் பட்ட போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். அதில் ஜித்தன் ரமேஷும் ஒருவர். வெளியே ஆரிக்கு இருக்கும் ஆதரவு ஜித்தன் ரமேஷுக்கும் எரிச்சல் தான் போல் உள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி மற்றும் கேப்ரியலாவுடன் ரகசியமாக பேசிக்கொண்டிருக்கும் ஜித்தன் ரமேஷ் ஆரி தான் இந்த வீட்டில் மிகப் மோசமானவர். அவர் உன்னை கெட்டவனாக காட்டுவதற்காக உன்னை தூண்டி விடுகிறார். இது ரசிகர்களுக்கு புரிகிறது. நீ சண்டையிடுவது சாதாரண விடயம். ஆனால் நீ சண்டை போட்டுவிட்டு போய் மன்னிப்பு கேட்பது உன்னில் தான் குற்றம் போல் காட்டுகிறது என கூறுகிறார்.

அதற்கு பாலாஜி கோபம் வந்ததும் திட்டி விடுகிறேன், என்னில் தவறு இல்லாவிட்டாலும் மன்னிப்பு கேட்பது அவர் என்னைவிட வயதில் பெரியவர். அவரிடம் அப்படி பேசக் கூடாது என்பதை உணரும் போது தான் என கூற. இல்லை நீ சண்டை போடும் போது ரசிகர்கள் நீ சரி என்கிறனர். நீ மன்னிப்பு கேட்கும் போது தான் நீ தவறு என திட்டுகின்றனர் என கூறியதுடன் ஆரி பெரியவர் போல் நடந்து கொள்ளவில்லை, நீ மன்னிப்பு கேட்காதே என கூறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர் என்ன ஜென்மம் என திட்ட ஆரம்பித்துள்ளனர்.!!