" "" "

பேஸ்புக்கில் நம்பி சாட் செய்பவரா நீங்கள்.? அப்படியானால் உங்களுக்கும் இது போன்ற ஆபத்து ஏற்படலாம் எச்சரிக்கை..! அதிகம் பகிருங்கள்!!

தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் நன்மைக்காக தான் என்று சொல்வது மாறி முழுமையாக தவறான பாதையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது, குறிப்பாக இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடுகிறது, அப்படி இந்தியாவை சேர்ந்த இளம் பெண் இருவர் 55 வயதான நபரிடம் ஏமாந்து போய் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் அம்ரிதா. கல்லூரி படிப்பை முடித்த இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பகுதி நேர தாதியாக பணி புரிந்து வருகிறார்.

அம்ரிதாவிற்கு புகைப்படம் எடுப்பது பிடிக்கும் என்பதால் புகைப்படங்கள் எடுத்து பதிவேற்றி வந்துள்ளார். இதற்கு அழகான இளைஞர் ஒருவர் கொமெண்ட் செய்து வந்துள்ளார். அத்துடன் இன்பாக்ஸ் ஊடாக சாட் செய்துள்ளார். சில நாட்கள் நண்பர்களாக இருந்த இவர்கள் தொலைபேசியில் பேசி காதலர்களாக மாறி உள்ளனர். குறித்த இளைஞர் தினமும் அழகிய இடையில் புகைப்படங்கள் அனுப்பியுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அத்துடன் அம்ரிதாவிற்கு கிப்ட் பணம், என அனைத்தும் கொடுத்து உதவியுள்ளார். அழகிய இளைஞர் தன்னை உண்மையாக காதலிப்பதாக நினைத்த அம்ரிதா பலமுறை சந்திக்க கேட்டுள்ளார். குறித்த இளைஞரோ வேலை பிஸி என சமாளித்துள்ளார். திடீரென வீட்டில் திருமணம் பேசியதால் மனமுடைந்த அம்ரிதா தனது காதல் பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் திருமணம் பேசி நாள் குறித்து விட்டதால் திருமணத்தை நிறுத்த முடியாது என தந்தை கூறியுள்ளார், இதனை தொடர்ந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறிய அம்ரிதா இளைஞர் ஏற்கனவே கொடுத்திருந்த முகவரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை தட்டிய அம்ரிதாவிற்கு தனது வயதில் இளம் பெண் ஒருவர் கதவை திறந்தது ஆச்சர்யமாக இருந்தாலும் பேஸ்புக்கில் உள்ள பெயரை கூறி கேட்டுள்ளார். சிறிது நேரம் யோசித்த இளம் பெண் காத்திருக்கும் படி கூறி சென்று 55 வயதான நபரை அழைத்து வந்துள்ளார்.

குடும்பத்தினர் அனைவரும் வந்ததுடன் விபரம் கேட்டுள்ளனர். தான் தேடி வந்த நபரை பார்த்ததும் அதிர்ந்தாலும் தன்னை சமாதானப் படுத்திக் கொண்ட அம்ரிதா தான் தேடி வந்தவர் இவர் இல்லை என்றும் , புகைப்படத்தை காட்டி இந்த இளைஞரையே தேடி வந்ததாகவும் புகைப்படத்தை காட்டியுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த குடும்பத்தினர் முதலில் அதிர்ந்தாலும் பின்பு அதில் இருப்பது வேற்று மொழி நடிகர் மற்றும் ஆண் மாடல் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தொலைபேசி இலக்கம் உட்பட மெசேஜ் அனைத்தையும் குறித்த பெண் காட்டியதால் தங்களை தந்தை செய்த ஏமாற்று வேலையை உணர்ந்த மகள்கள் குறித்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அத்துடன் யுவதியை பெற்றோரிடம் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ஆனால் தங்கள் மகளை காணவில்லை என பொலீஸில் பெற்றோர் புகார் கொடுத்ததால் இது அனைவருக்கும் தெரியவர குறித்த நபரை பொலீஸார் எச்சரித்துள்ளனர்.