ஆசிய போட்டியில் பதக்கம் வென்று உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்ற மாதவன் ராஜ்குமாரை அங்கீகரிக்காத அரசு…!!

மலையக மக்கள் நகர மக்களுக்கு இணையாக தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஆரம்பித்து விட்டனர். அனைத்து துறைகளிலும் தடம்பதித்து மலையகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் நுவரெலியாவை சேர்ந்த மாதவன் ராஜ்குமார் பற்றி எமது தளத்திலும் பதிவு செய்திருந்தோம். ஜூலை 27, 28, 29, திகதிகளில் ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையின் சார்பாக கலந்துகொண்டார்.

இதில் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. 30 நாடுகளை சேர்ந்த ஆணழகன்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் மாதவன் ராஜ்குமார் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டார். இதனால் இவருக்கு டுபாயில் நவம்பர் 11ம் திகதி நடபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

!Advert!

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் நாடு திரும்பியுள்ள ராஜ்குமார் மாதவனுக்கு ஏகபட்ட பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில் இலங்கை விளையாட்டு அமைச்சில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்ற ராஜ்குமாருக்கு விளையாட்டு அமைச்சு தேனீர் கோப்பை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளது.

இதனால் தமிழ் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜ்குமாரின் தாய் இன்றளவும் தோட்டத்தில் வேலை செய்கிறார். இவரது செலவுகள் சாப்பாடுகள் என அனைத்தையும் தன்னார்வலர்களே வழங்கினார்கள்.

!Advert!

இந்த நிலையில் உதவ வேண்டிய விளையாட்டு அமைச்சு வெறும் கப் உடன் ஏமாற்றியுள்ளது. இதனால் பலரும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருவதுடன் விளையாட்டு அமைச்சு உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் ராஜ்குமாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.