" "" "

காலில் ஆணி வந்து வலி தாங்க முடியவில்லை, பாதம் வலி உயிர் போகிறதா.? இதோ நொடியில் குணப்படுத்தும் அற்புத மருந்து.!

பாதங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் பித்தவெடிப்புக்கு நிகரான வலியையும் வேதனையும் கொடுப்பது கால் ஆணி நோய் ஆகும். பாதங்களைத் தரையில் ஊன்றி நடந்து கொள்ள முடியாத அளவுக்கு இந்நோய் பாடாய்ப் படுத்தி விடுகின்றது. அது அதிகரித்த உடல் எடையால் ஏற்படுவதாக கூறப்படுவதுடன், பாதங்களில் சில கனுதிகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதாலும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது. பொருத்தமற்ற பாதனிகளாலும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இவற்றுக்கு போதிய மருத்துவம் வழங்கப்படாவிட்டால் இவை நாளடைவில் பெரும் காயங்களாக மாறவும் வழியேற்படும். ஆகவே ஆரம்பத்திலேயே கால் ஆணிக்கு சரியான மருத்துவத்தை வழங்க வேண்டியது அவசியமாகும். இதற்கும் சித்த வைத்தியம் பல மருந்துகளைக் குறிப்பிட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கால் ஆணி கண்டவுடன் பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். அதேபோல் மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.இவற்றில் ஏதாவது ஒரு முறையைக் கையாண்டு உங்கள் கால்களில் ஏற்படக்கூடிய கால் ஆணி எனும்பிரச்சனைக்கு நீங்கள் தீர்வைக் கண்டுகொள்ளலாம்.