ஆரி தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர்..அதிர வைத்த ரசிகர்கள். வைரலாகும் புகைப்படங்கள்.!!
தற்போது எங்கு பார்த்தாலும் ஆரி ஆரி என்றே ரசிகர்கள் கோஷம் இட்டு வருகின்றனர் எல்லா இடத்திலும் ஆரிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. சுமார் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்து சாதிக்க முடியாததை பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களில் சாதித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
பல கோடி ரசிகர்கள் தற்போது ஆரிக்கு இருக்கின்றனர். இந்தியாவின் மகனான ஆரி இலங்கையின் மருமகன். இதனால் இந்தியா மற்றும் இலங்கையில் இவருக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த நிலையில் ஆரிக்கு ஆஸ்திரேலியாவிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் மட்ச் நடக்கும் மைதானத்தில் ஆரி தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பதாதைகளுடன் ரசிகர்கள் கூச்சலிட்டதை காண முடிந்தது. தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.!!
#AariArmy Today at Sydney in #AUSvIND Match ?#BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBossTamil #Aari #AariArjunan #YouthIconAari pic.twitter.com/GWGSj37xsb
— Laxmi Aarthy (@laxmiaarthyoffl) January 10, 2021