" "" "

வெளிவரும் பிக் பாஸ் ஆரியின் உண்மை முகம்.! இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறரா.!? ஷாக்கில் ரசிகர்கள்.!! இதோ..

பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் உண்மையென நம்பும் ரசிகர்கள் இருக்கும் வரை பிக் பாஸ் போல் எத்தனை நிகழ்ச்சி வந்தாலும் வெற்றி பெறும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் ஆரி. போட்டியாளர்களால் ஆரி ஒதுக்கப் படுவதும், எதையும் தட்டிக் கேட்பவராக ஆரி இருப்பதும் இதற்கு காரணம், சிலர் இவருக்கு “பொம்பள ஓவியா” என பெயர் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் ஆரி அத்தனை நல்லவரா என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பதாகவே பதில் வரும். ஆரி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாதி நேரம் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுகிறார். அவருக்கு கொடுக்கப் பட்ட வேலை, டாஸ்க் என இருப்பதோடு கண்டெண்ட் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? யாருடன் சண்டையிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். நேற்றைக்கு முன் தினம் இரவு ஆரி,சனம்ஷெட்டி, பாலாஜி, அனிதா, பாலாஜி ஆகியோர் இருந்து பேசிக்கொண்டிருந்த போது ஆரி இவர்களிடம் நான் தான் ரியோவிற்கு விட்டுகொடுத்தேன்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நான் கடந்தவாரமே ரியோவிற்கு சொன்னேன், நீ அடுத்த வாரம் தலைவனாக இரு, என்று அதே போல் கேப்டன்சி டாஸ்கில் இறுதியாக நானும் ரியோவும் தான் இறுதியாக இருந்தோம், அப்போது ரியோ தடுமாறிக்கொண்டிருந்தார், ஆனால் நான் தெளிவாக இருந்தேன், இருப்பினும் இந்த முறை ரியோ கேப்டனாக வரட்டும் என்று விட்டுக் கொடுத்தேன் என கூறினார்.

இதற்கு பாலாஜி இரண்டாவது வாரம் ரியோவை தோளில் தூக்கி வைத்து வெற்றிபெற வைத்தது,குரூப் இல்லாமல் தனியாக விளையாட வேண்டும் என்பதற்காக தான் என கூறினார். ஆனால் நேற்று பாலாஜி ஆரி சண்டையில் ஆரி எதுவும் தெரியாத அப்பாவியாக மாறிவிட்டார். பாலாஜி ஆரியின் காலில் விழுந்தது, கேலியாக மாறியது.

போட்டியாளர்கள் அண்மையில் ஆரியை ஒதுக்குவது எதை செய்தாலும் பின் அமைதியாக நல்லவர் போல் நடிப்பார் என்பதால் தான். வெளியே இருந்து பார்க்கும் எமக்கு தான் ஆரி நிஜத்தில் நல்லவர் போல் இருக்கிறார். நிஜத்தில் அவரது எண்ணம் டைட்டில் தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.!!