" "" "

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி வெற்றி பெற்ற பின் போட்ட முதல் பதிவு.! கொண்டாடும் ரசிகர்கள்.!!

பிக் பாஸ் வீட்டில் வெற்றிகரமாக 106 நாட்களை கடந்து மக்கள் மனதை வென்று நேற்றைய தினம் டைட்டிலை வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் யாராவது ஒருவருக்கு ஏதாவது அறிவுரை கூறிக்கொண்டே இருந்த ஆரியை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இதனை சனிக்கிழமை எபிசோட் ஒன்றில் கமலஹாசன் ஆரிக்கு சொல்ல அறிவுரை சொல்வதை குறைத்துக் கொண்ட ஆரி குறை சொல்ல ஆரம்பித்தார். இது பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் உள்ள 17 போட்டியாளர்களுடனும் ஆரிக்கு சிறிய அளவில் சரி சண்டை வந்தது..

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆரியை ஒட்டு மொத்த போட்டியாளர்களும் வெறுக்க ஆரம்பித்த போது வெளியே மக்கள் நேசிக்க ஆரம்பித்தனர். ஆரிக்கு இந்தியாவில் மட்டும் இன்றி இலங்கையில் இருந்தும் வாக்குகள் குவிந்தது. ஆரியின் மனைவியின் வேண்டுகோளினால் புலம்பெயர் தமிழர்கள் ஆரிக்கு வாக்களித்தனர், அதுமட்டும் இன்றி சிவாஜி திரைப்பட ரஜினி போல் ஆரி பலருக்கு உதவி செய்திருந்தார்.

விவசாயம், கலாச்சாரம் என ஆரி அசத்தியிருந்தார். இதனால் அதற்கான பலனாக மக்கள் வாக்களித்தனர். பிக் பாஸ் சீசன் 4ல் டைட்டில் வெற்றி பெற்ற ஆரி மக்களுக்கு நன்றி சொல்லி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் “எல்லா புகழும் மக்களுக்கே” உங்களால் வெற்றி பெற்றேன், உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.!!