நிறைவடைந்த பிக் பாஸ் பைனல் ஷூட்.!! வெற்றியாளர் அறிவிப்பு. மகிழ்ச்சியில் கொண்டாடும் ரசிகர்கள்.. 1st 2nd 3rd இவர்கள் தான்.!!
அக்டோபர் மாதம் 4 ம் திகதி ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 106 நாட்களை கடந்த நிலையில் இன்றைய தினம் பைனல் நிகழ்ச்சி இடம்பெற்றது. நேற்றில் இருந்து இடம் பெற்று வந்த சூட்டிங் சற்று முன்னர் நிறைவடைந்தது. பிக் பாஸ் இந்த சீசனில் கலந்துகொண்ட அத்தனை போட்டியாளர்கள் மட்டும் இன்றி சீசன் 3ல் கலந்துகொண்டு டைட்டில் வெற்றி பெற்ற முகென், மற்றும் பைனல் வரை வந்த கவின், செரின் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டதுடன் அவர்களுக்கு கமலஹாசன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 5வது இடத்தை சோம் சேகர் வெளியேறினார், 4ம் இடத்தை பெற்று ரம்யா பாண்டியன் வெளியேற மூன்றாம் இடத்தை பெற்று ரியோ ராஜும் வெளியேறினார். இறுதியாக பாலாஜி மற்றும் ஆரி இருவரும் மேடைக்கு வந்த நிலையில் ஆரி வெற்றி பெற்றார்.
சினேகன் – ஆரவ். ஐஸ்வர்யா தத்தா – ரித்விகா. சாண்டி – முகென் வரிசையில் பாலாஜி – ஆரியும் இணைந்து கொண்டனர். பாலா வெற்றி பெறவில்லை என்பது பாலா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் எல்லா சீசனை போலவும் டைட்டில் வென்றவர்களை விட இரண்டாம் இடம் பெற்றிக் கொண்டவர்களுக்கே வாய்ப்புகள் அதிகம்.
அதனால் பாலாஜி திரையுலகில் ஜொலிப்பார் என நம்பப் படுகின்றது. டைட்டில் வின்னர் ஆரி மற்றும் பைனலிஷ்ட் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.!!