" "" "

“பிக் பாஸ் வீட்டில் நீங்கள் தான் சரி மற்றவர்கள் தவறு” வைரலாகும் சனம்ஷெட்டி மற்றும் ஆரியின் சண்டை .!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக ஆதரவை பெற்றவர்களில் சனம் ஷெட்டியும் ஒருவர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து பாலாஜியுடன் சண்டை போட்டால் கூட எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். மாடலிங் துறையில் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்துகொண்டே இருந்தது.

ஆனால் சனம் யார் தவறு செய்தாலும் அதனை நேரடியாகவே கேட்டு விடுவார். சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி இடையேவும் அடிக்கடி சண்டை வந்தது. காடா இல்லை நாடா டாஸ்கில் சுரேஷின் கையில் இருந்த தடி சனம் ஷெட்டியின் தலையில் பட கடுப்பாகி வாடா போடா என திட்டி தீர்த்தார் சுரேஷ். பிக் பாஸ் வீடே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது..

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதே போல் அர்ச்சனாவுடன் சண்டை வந்த போதும் என் வேலை எனக்கு தெரியும் உங்கள் வேலையை பாருங்கள் என வாயடைக்க வைத்தார். அது மட்டும் இன்றி உணவு சண்டையின் போது ஆரியுடன் சண்டை மூண்டது. உணவை கொட்டக் கூடாது என சட்டம் போட்ட ஆரி அதனை மீறியதால் சண்டை தொடங்கியது.

சனம் உணவை வீணாக்கிவிட்டார் என குறை கூறியதால் பிரச்சனை வெடிக்க சனம் ஷெட்டி ” இந்த வீட்டில் நீங்கள் தான் முழுமை, மற்றவர்கள் எல்லோரும் வெட்டி தான் என சனம் ஆரியை திட்டி தீர்த்தார். அந்த வாரமே சனம் வெளியேற்றப் பட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.!!