" "" "

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரிக்காக வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரிக்கும் பிரபல நடிகர். இதோ வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றது. வீட்டில் இருந்து ஒவ்வொரு வார எவிக்‌ஷனிலும் ஒவ்வொருவராக வெளியேறிய பின்னர் தற்போது ஆரி, பாலா, ரியோ, சோம், ரம்யா பாண்டியன், கேப்ரியலா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் தற்போது ரசிகர்களின் கணிப்பின் படி ஆரியே அதிக வாக்குகளால் முதலிடத்தில் இருக்கின்றார்.

அதனால் அவரே டைட்டில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் என்ன நடக்கும் என்பதை தொலைகாட்சியே அறியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் ஆதரவாளர்களை ஆதரித்து வாக்கு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆரியின் நண்பரும் நடிகருமான நடிகர் செளந்தரராஜன் ஆரிக்காக வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் வெளியிட்டுள்ள செளந்தர்ராஜன், ஆரி எனது சிறந்த நண்பன், அத்துடன் அவனுக்கு நல்ல மனசு, அவன் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும். கண்டிப்பாக அவன் வெற்றிபெற்றால் மக்களுக்கு உதவுவான், அதனால் அவனுக்கு வாக்களியுங்கள், என கேட்டுக் கொண்டதுடன் நடிக நடிகைகளை டேக் ஆரிக்கு ஆதரவு வழங்கும் படி கேட்டு வருகிறார்..

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைக்கிறது. இதில் டைட்டிலை ஆரி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் பலரும் ஆரிக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். !!