" "" "

நடிகர் சுஷாந்தை தொடர்ந்து நடிகை மயூரியின் கணவரான பிரபல நடிகர் தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல நடிகையின் கணவர் மன அழுத்தத்தால் தற்கொலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Aashutosh Bhakre என்ற மராத்தி நடிகரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சீரியல் மூலம் பிரபலமாகி மராத்தி சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் நடிகை மயூரிக்கும் ஆஷுக்கும் திருமணமாகி 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில்,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நேற்றைய தினம் ஆஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவ தினத்தன்று மயூரியும் ஆஷின் தாயாரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதன் போது அங்கு வந்த ஆஷ் அறைக்கு செல்வதாக சொல்லி சென்றுள்ளார். நீண்ட நேரமாக மகனை காணவில்லை என ஆஷின் தாயார் மயூரியிடம் உடனடியாக ஆஷின் அறைக்கு சென்ற போது அறை உள்பக்கம் பூட்டப் பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ஆஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்,

இந்த சம்பவம் தொடர்பாக ஆஷின் நண்பர்கள் குறிப்பிடுகையில் லாக் டவுண் காரணமாக ஆஷ் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவை எடுத்துள்ளாக தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கை வெளியான பிறகே உண்மை நிலை தெரிய வரும் என பொலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவரது மரணம் நடிகை மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…!!