" "" "

தற்கொலைக்கு முயன்ற நடிகர் லிவிங்க்ஸ்டன், காப்பாற்றிய பிரபல நடிகர்.!! காரணம் இது தானாம்.!!

“லிவிங்க்ஸ்டன்” இந்த பெயரை கேட்டதுமே நினைவில் வரும் திரைப்படம் சொல்லாமலே. நடிகை கெளசல்யாவுடன் இணைந்து லிவிங்க்ஸ்டன் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. காதல் வேண்டும் என்பதற்காக ஊமையாக நடித்து இறுதியில் தனது நாக்கை அறுத்துக்கொள்ளும் அப்பாவி இளைஞராக லிவிங்க்ஸ்டன் நடித்திருப்பார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திர நாயகன், காமெடியன் என சினிமாவில் அத்தனை கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். சினிமாவில் வாய்ப்பு குறைய சீரியலில் நடித்தார் பின்பு சொந்தமாக தொழில் ஆரம்பித்து செய்து வருகிறார், தற்போது லிவிங்க்ஸ்டனின் மகள்களும் சினிமாவில் நடிக்க வந்து விட்டார்கள். தற்போது மகளின் திரை பயணம் பற்றி பேசிய லிவிங்க்ஸ்டன், இன்றைய காலத்தில் சினிமா துறையில் பயணிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலிகள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சினிமாவில் தங்கள் திறமையை காட்ட ஏதோ ஒரு விதத்தில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் எமக்கு வாய்ப்புகள் என்பது தேடி அலைத்து செத்துப் போனாலும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும். நான் சினிமாவில் வாய்ப்பு தேடி சுமார் மூன்று வருடங்கள் அலைந்தேன். யாருமே கண்டுகொள்ளவில்லை. கையில் ஒரு ரூபாய் இல்லை, ஒரு நேர உணவிற்கு கஷ்டம், எப்படியோ சின்ன வாய்ப்புகள் கிடைத்து நடிக்க வந்த போது மீண்டும் சரிவு.

சினிமா இல்லாவிட்டால் வாழ்க்கை வேண்டாம் என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கு சென்றுவிட்டேன். இது எப்படியோ நடிகர், இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் காதுகளுக்கு சென்றது. அதன் பின் என்னை கூப்பிட்டு பேசிய அவர் தற்கொலை அனைத்திற்கும் முடிவாகாது என கூறி வாய்ப்பு தந்தார். சில நேரம் பாக்கியராஜ் இல்லாவிட்டால் இன்று நான் உயிருடன் இல்லாமல் இருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.!