" "" "

நடிகை சரிதாவை பிரிவதற்கு கணவர் சொன்ன அதே காரணத்தை கூறி சரிதாவின் முன்னாள் கணவரை விவாகரத்து செய்தார் இரண்டாவது மனைவி தேவகி.!

நடிகை சரிதாவின் முதல் கணவர் நடிகர் முகேஷ் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதில் பெற்றோரின் கட்டாயத்தால் திருமணம் செய்த சரிதா வெறும் ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்த நிலையில் அவரை பிரிந்தார்.

அதன் பின் தனிமையில் வாழ்ந்த சரிதா சினிமாவில் முன்னணி நடிகையாக அசத்த தொடங்கினார். ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்தார். சரிதாவின் நடிப்பில் மயங்கிய நடிகர் முகேஷ் சரிதாவை காதலித்து 1988ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

சுமார் 23 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் 2011ம் ஆண்டு சரிதாவை விவாகரத்து செய்தார் முகேஷ். அதன் பின் மகன்களுடன் வெளிநாடு சென்ற சரிதா மகன்களுக்காக வாழ்ந்து வருகிறார். அண்மையில் சரிதாவின் மகன் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். சரிதாவை பிரிந்த முகேஷ் பரத நாட்டிய கலைஞர் தேவகியை திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி 8 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தேவகி முகேஷை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேவகி கூறுகையில் 8 வருடங்கள் வாழ்ந்தும் என்னால் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை, இதன் பின்பும் புரிந்துகொள்ள முடியுமா என்பது தெரியாது, அதனால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன், இருவருக்கும் இடையில் எந்த கோபமும் இல்லை, மகிழ்ச்சியாகவே பிரிகிறோம் என தெரிவித்துள்ளார். சரிதாவை பிரியும் போது இதனை தான் முகேஷ் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!!