" "" "

பிரபல காமெடி நடிகர் வடிவேல் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் மீரா மிதுன்.! கடுப்பில் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!

காமெடி நடிகர் வடிவேல் அவர்களுக்கு திரைப்பட வாய்ப்பு தருவதாக நடிகை மீரா மிதுன் கூறியுள்ளது ரசிகர்களுக்கிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடிகர் வடிவேல் அவர்கள் கடந்த 10 வருடங்களாக தனக்கு திரைப்படங்களில் நடிக்க வய்ப்பு வரவில்லை என்றும், தான் 10 வருடங்கள் லாக் டவுனில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

உடலில் தெம்பும், நடிக்கும் திறமையும் இருக்கிறது ஆனால் வாய்ப்புகள் வாசல் வரை கூட வரவில்லை, என கண் கலங்கியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் வடிவேல் அவர்களுக்கு வாய்ப்பு குறைந்தது, தற்போதும் வடிவேல் அவர்கள் பிடிவாதத்தை குறைத்தால் வாய்ப்புகள் குவிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் இயக்குனர்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது இப்படி இருக்கையில் வடிவேல் அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக சர்ச்சை நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார். இது குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன் வடிவேல் சார் உங்களுக்கு நான் திரைப்பட வாய்ப்பு தருகிறேன்.

என் மேனஜருடன் பேசுங்கள், உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் என்கிறேன் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் முதல் உனக்கு வாய்ப்பு உள்ளதா என்று பார் பின் அவருக்கு பார்க்கலாம் என திட்டி தீர்த்து வருகின்றனர்.!