" "" "

விபத்தில் சிக்கிய நடிகர் விஷால்.! பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.!

படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து நடிகர் விஷால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நுழந்த குறுகிய காலத்திலேயே நடிகர் சங்கத் தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் வந்தவர் நடிகர் விஷால்.

நடிகை வரலக்‌ஷ்மி, நடிகை லக்‌ஷ்மி மேனன் என பலருடன் கிசுகிசுக்களில் சிக்கிய விஷால் அனிஷா ரெட்டி என்ற பெண்ணுடன் காதலில் விழுந்து திருமண நிச்சயமும் செய்துகொண்டார். பின்னர் இவர்களது திருமணம் நின்று போனது, அதன் பின் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வந்த விஷால் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பில்ம்சிட்டியில் நடந்து வருகிறது. திரைப்படத்தில். இருக்கும் விறுவிறுப்பான சண்டை காட்சி ஒன்றில் தெலுங்கு வில்லன் நடிகர் பாபு ராஜ் அவர்களுடன் சண்டை காட்சி படமாக்கப் பட்டது,

இதன் போது திடீரென ஏற்பட்ட விபத்தில் விஷாலின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறன.!