பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே நடிகை மீனாவிற்கு வில்லனாக நடித்த பாலாஜி. வைரலாகும் காட்சி.!!
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டவர் பாலாஜி முருகதாஸ். தாய் தந்தையால் சிறு வயதிலேயே அதிக துன்பத்தை தாங்கிய பாலாஜி தனது சொந்த முயற்சியால் முன்னேறினார். வெறும் 24 வயதில் மிஸ்டர் இந்தியா பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
யாருடைய உதவியும் இன்றி பல அடிகள் தோல்விகள் என சந்தித்த பாலாஜிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு தான் பிக் பாஸ். இதில் தனக்கு என்ன பிடிக்குமோ அதனை செய்து கெட்டவராகவே தன்னை காட்டிக் கொண்டார்.
நல்லவன் தான் நடிக்கனும் கெட்டவன் எப்படியும் வாழலாம் என பிக் பாஸில் நடிக்காமல் இருந்த பாலாஜியை பலருக்கு பிடித்து போனது. இதனால் பைனல் வரை கொண்டு வந்து இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த நிலையில் பாலா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நடிகை மீனாவிற்கு வில்லனாக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருப்பது தெரிவந்துள்ளது. Caroline kamatchi வெப் சீரிஸில் பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். இதோ புகைப்படம்.!!