மேடையில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா. வைரலாகும் வீடியோ இதோ..!!

இன்றைய முன்னணி நாயகர்களான அஜித், விஜய் போன்றோரை விட அதிக அளவு ரசிக ரசிகைகளுடன் முன்னணி நாயகனாக இருந்தவர் நடிகர் சூர்யா. பிரபல நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா ஆரம்பத்தில் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. யுவதிகளின் கனவு நாயகனாக இருந்த சூர்யா ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிப்பவர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனால் சூர்யாவின் திரைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் பட்டது. ஒரு கட்டத்திற்கு பின் சூர்யாவின் திரைப்படங்கள் தோல்வியடைய தொடங்கியது, இதனால் மார்கெட் சரிந்தது, ஆனால் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. அதற்கு காரணம் சூர்யாவின் நல்ல மனசு தான்.

குடும்பத்தினர் உதவியுடன் அகரம் அறக்கட்டளையை ஆரம்பித்த சூர்யா வறுமை கோட்டின் கீழ் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பேற்று உதவி வருகிறார். இந்த நிலையில் அகரம் அறக்கட்டளையின் நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் அரசியல் வாதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதன் போது அகரம் அறக்கட்டளையில் உதவி பெற்று படித்துவரும் மாணவி தனது சோகத்தை மேடையில் கொட்டி தீர்த்த போது கேட்டுக் கொண்டிருந்த சூர்யா கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.

மாணவி பேசிய 10 நிமிடங்களும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்த சூர்யா மேடைக்கு எழுந்து சென்று மாணவியை கட்டித் தழுவி ஆறுதல் கூறியுள்ளார். இதனை பார்த்த அனைவருமே கண்ணீர் சிந்தியுள்ளனர்..!!

Video Copyrights & Credits Owned by :News7 Tamil