" "" "

திருமணம் செய்து சில நிமிடங்கள் கூட வாழாத ஜோடி, விஷமருந்தி தற்கொலை.! பெற்றோரால் பறிபோன அப்பாவி உயிர்.!!

பெற்றோரின் பிடிவாதத்தால் 18 வயது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் திண்டுக்கல் கன்னிமேய்க்கான் பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த 18 வயதான ஆஜித் என்பவர் தனது அத்தை மகளாக சிவரஞ்சனி என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்தார்.

இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறிய போது இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன் சிவரஞ்சினிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் செய்துள்ளனர். ஒரு வயது குறைவானதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என கூறியுள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அத்துடன் அஜித் 12 வரை படித்துவிட்டு கூலி வேலை செய்ய சிவரஞ்சனி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார், இதுவும் திருமணத்தை தடுக்க காரணமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து போன ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் சென்று தாலி கட்டியுள்ளனர்.

பின் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்ததுடன் உணவுடன் விஷத்தையும் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் விஷம் அருந்தி விட்டு பெற்றோருக்கு கால் செய்து ஒருவர் இல்லாமல் ஒருவரால் வாழ முடியாது என பலமுறை கூறி விட்டோம், ஆனால் நீங்கள் எங்களை பிரிக்கவே முயன்றீர்கள், அதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

உடனடியாக அவர்கள் குறிபிட்ட இடத்திற்கு வந்த பெற்றோர் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அஜித் ஏற்கனவே இறந்துள்ள நிலையில் ரஞ்சனி உயிருக்கு போராடி வருகிறார். பெற்றோரின் பிடிவாதம் இரு உயிரை பிரித்துவிட்டதாக உறவினர்கள் கூறி வருகின்றனர்.!!