" "" "

கற்பழிக்க முயன்றவனை துடிக்க துடிக்க கொலை செய்த வீர பெண்.!! 3 நாட்களில் விடுதலை செய்த பொலீஸார்.!! தமிழ் நாட்டில் நடந்த மகிழ்ச்சியான விடயம்.!!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் ஒருவர் நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு கடந்த 2-ம் தேதி சோழவரம் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பொலீஸார் மற்றும் மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த பெண் ஏன் இப்படி ஒரு செயலை செய்தார் என்னானது என்று பொலீஸார் செய்த விசாரணையில் பெண் சொன்ன விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது தாய் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருவரும் வேறு திருமணம் செய்துகொண்டனர். பள்ளி படிப்பை முடித்திருந்த இவர் கல்லூரி படிப்பு முடியும் வரை தந்தையுடன் இருந்ததுடன் பின் தாயுடன் சென்று வாழ்ந்துள்ளார். ஆனால் தாயின் உறவினர் ஒருவர் குறித்த யுவதியிடம் தவறான முறையில் நடக்க பல முறை முயன்றுள்ளார். ஒரு முறை குடி போதையில் இளம் பெண்ணுக்கு முத்தமும் கொடுத்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் குறித்த நபரிடம் இருந்து ஒதுங்கியே இருந்துள்ளார். ஆனால் அஜித் என்றழைக்கப்படும் குறித்த நபர் தான் முத்தம் கொடுத்ததை அனைவருக்கும் கூற தாயார் யுவதியிடம் கேட்டுள்ளார். இனி மறைக்க முடியாது என்பதால் அனைத்தையும் தாயிடம் கூற உறவினர்கள் ஒன்று கூடி அஜித் எச்சரித்துள்ளனர்.

இது போன்ற செயல் இனி நடந்தால் பொலீஸில் புகார் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அஜித்தின் பெண் புத்தி தனம் தெரிந்ததால் அஜித்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதனால் இனி எப்படியாவது குறித்த பெண்ணை திருமணம் செய்யலாம் என திட்டம் தீட்டிய அஜித் அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளார்.

சம்பவ தினத்தன்று இயற்கைஉபாதை காரணமாக சிறுவர்களை அழைத்துக் கொண்டு குதிரை பண்ணை பகுதிக்கு சென்றுள்ளார் குறித்த யுவதி. சிறுவர்களை தெருவில் நிறுத்தி விட்டு காட்டுக்குள் சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த அஜித் சிறுவர்கள் செல்லும் படியும் தான் காவல் இருப்பதாகவும் கூற சிறுவர்கள் ஓடி உள்ளனர். குறித்த யுவதி புதரில் இருந்து வெளியே வந்த போது திருமணம் செய்ய கட்டாய படுத்திய அஜித் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அத்துடன் கத்தினால் கத்தியால் குத்துவேன் என மிரட்டியுள்ளார். சாவுக்கு பயந்த யுவதி போராட முடியாமல் இருந்த போது கட்டிப் பிடிக்க அஜித் முயன்றுள்ளார். திடீரென அஜித்தை பிடித்து யுவதி தள்ள நிலை தடுமாறி அஜித் கீழே விழ கத்தி வீசுப்பட்டுள்ளது. கத்தியை எடுத்த யுவதி கொடூரமாக அஜித்தை குத்திவிட்டு நேரடியா பொலீஸ் ஸ்டேசன் என்று சரணடைந்துள்ளார்.

மூன்று நாட்களாக யுவதியிடம் நடந்த விசாரணையில் தற்பாதுகாப்புக்காக கொலை செய்துள்ளது உறுதிபடுத்தப் பட்ட நிலையில் இன்றைய தினம் விடுதலையாகி உள்ளார். யுவதிக்கு கவுன்சிலிங் கொடுத்து பாதுகாப்பும் கொடுக்கும் படி பொலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.!!